வணக்கம், நான் சரவணக்குமார், ஒரு முதுகலை வணிக மேலாண்மை பட்டதாரி மற்றும் ஒரு நிதி மேலாண்மை ஆலோசகர். எனக்கு 10 வருடங்களுக்கு மேலான அனுபவம் உள்ளது.அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.தற்பொழுது நிதி மற்றும் காப்பீடு ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறேன்.
பல்வேறு வகையான காப்பீடு திட்டங்கள் மற்றும் அதன் விதிமுறைகள் (Terms and Conditions) பற்றிய முழு தகவல்கள் அறிய என்னைத் தாராளமாக அணுகலாம்.
நான் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவராகவும் கூடுதலாகப் பணியாற்றி வருகிறேன். ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவல்களுக்கும் என்னை அணுகலாம். நான் உங்களுக்கு உதவி புரிய என்றும் காத்துள்ளேன்.
தனிநபர் மற்றும் குடும்ப மருத்துவ காப்பீடு, தீவிர நோயாளிகள் பிரிவு மருத்துவ காப்பீடு, இதய நலக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு போன்ற பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களுக்கான ஆலோசனைகளை நான் வழங்குகிறேன்.
திட்டங்கள் தேர்வு செய்வதில் மிகக் கவனம் தேவை. எந்த ஒரு திட்டமும் அனைத்துப் பயனாளிகளுக்கும் பொருந்தி இருப்பது இல்லை. அனைவருக்கும் பயன்படும் வகையில் LIC நிறுவனம் பல்வேறு திட்டங்களை வழங்குகிறது.
ஓய்வு காலங்களில் நாம் யாரையும் எதிர்பார்த்து இருக்கத் தேவை இல்லை.
அறுபது வயதுக்கு மேல் நமது அன்றாடச் செலவினங்களை எதிர்கொள்ள ஓய்வூதியம் மிகவும் அவசியமாக இருக்கிறது.
ஓய்வு காலத்தில் சுய மரியாதையோடு வாழ ஓய்வூதியம் மிக அவசியமான ஒன்று.
நாம் நம் சொந்தங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும்.
சுதந்திரமாக நமக்கு பிடித்த விஷயங்களைச் செய்ய முடியும்.